5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை தொடங்குகிறது

June 24, 2024

நிகழாண்டுக்கான இந்தியாவின் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை தொடங்குகிறது. கிட்டத்தட்ட 96320 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1.5 லட்சம் கோடி மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு சவாலானதாக இருக்காது என கருதப்படுகிறது. ஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் போதிய அளவிலான அலைக்கற்றை உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். […]

நிகழாண்டுக்கான இந்தியாவின் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை தொடங்குகிறது. கிட்டத்தட்ட 96320 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1.5 லட்சம் கோடி மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு சவாலானதாக இருக்காது என கருதப்படுகிறது. ஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் போதிய அளவிலான அலைக்கற்றை உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டு ஏல மதிப்பு 12500 கோடி அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 96320 கோடி ரூபாயில் 13% ஆகும். மேலும், நடப்பாண்டில் நடைபெறும் ஸ்பெக்ட்ரம் நிலத்தில், ஏர்டெல் நிறுவனம் அதிகத் தொகையை செலவிடும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu