தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
உச்சநீதிமன்றம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த காவல்துறையினர் இன்று அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.