சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு, அரசு அதிகாரிகள் உறுதி செய்தனர். கைரேகை பதிவு அவசியம் தான், ஆனால் கடைசி தேதி எதுவும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தஞ்சையில், ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தோர் பெயர் நீக்கம் ஆகியவை ரேஷன் கார்டில் அப்டேட் செய்யாவிட்டால் அது செல்லாது என ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக, அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அதிகாரி இருவரும் இது ஒரு வதந்தி என உறுதி செய்துள்ளனர். அந்தியோதயா மற்றும் முன்னுரிமை வகை ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.