டோக்கனைஸ்ட் ரூபே கார்டுகள் பயன்பாட்டுக்கு வந்தது

ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் டோக்கனைஸ் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு தற்போது பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கார்டுக்கும் உள்ள சரிபார்ப்பு மதிப்பு எண் எனப்படும் சி வி வி இல்லாமலேயே பொது மக்களால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். பயனர் ஒருவர், இணைய வர்த்தக தளத்தில் ரூபே கார்டு விவரங்களை உள்ளிட்டு சரிபார்த்திருந்தால், சி வி வி விவரங்களை அளிக்காமலேயே பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு முறை வர்த்தகம் செய்யும் பொழுதும் […]

ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் டோக்கனைஸ் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு தற்போது பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கார்டுக்கும் உள்ள சரிபார்ப்பு மதிப்பு எண் எனப்படும் சி வி வி இல்லாமலேயே பொது மக்களால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். பயனர் ஒருவர், இணைய வர்த்தக தளத்தில் ரூபே கார்டு விவரங்களை உள்ளிட்டு சரிபார்த்திருந்தால், சி வி வி விவரங்களை அளிக்காமலேயே பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு முறை வர்த்தகம் செய்யும் பொழுதும் பயனர்களுக்கு நேரம் மிச்சமாகும்.

"டோக்கனைஸ்ட் ரூபே கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யும் போது, பயனர்களுக்கு தங்கள் அதிகாரப்பூர்வ கைபேசி எண்ணில் ஒரு முறை பயன்பாட்டு எண் (ஓடிபி) வழங்கப்படும் அதன் மூலம் மட்டுமே, பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். இதனால் பரிவர்த்தனை பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது" இவ்வாறு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu