டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளைக் கடந்தது - வரலாறு காணாத வீழ்ச்சி

October 20, 2022

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளை கடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இன்றைய வர்த்தக நாளின் போது, ரூபாய் மதிப்பில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நேர்ந்தது. இன்றைய நாளில், ரூபாயின் மதிப்பு உச்சபட்சமாக 82.72 புள்ளிகளை தொட்டது. அதே வேளையில், குறைந்தபட்சமாக 83.29 புள்ளிகளை எட்டியது. இறுதியில், இன்றைய வர்த்தக நாளின் முடிவில், 82.75 புள்ளிகளாக இந்திய ரூபாயின் […]

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளை கடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இன்றைய வர்த்தக நாளின் போது, ரூபாய் மதிப்பில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நேர்ந்தது. இன்றைய நாளில், ரூபாயின் மதிப்பு உச்சபட்சமாக 82.72 புள்ளிகளை தொட்டது. அதே வேளையில், குறைந்தபட்சமாக 83.29 புள்ளிகளை எட்டியது. இறுதியில், இன்றைய வர்த்தக நாளின் முடிவில், 82.75 புள்ளிகளாக இந்திய ரூபாயின் மதிப்பு நிலை கொண்டது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் 83.05 புள்ளிகளாக இந்திய ரூபாயின் மதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 1.17% உயர்ந்து, 93.49 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு 83 புள்ளிகளை கடக்க நேரிட்டது. இந்நிலையில், இன்றைய வர்த்தக நாளின் இடையில், மத்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால், ரூபாயின் வீழ்ச்சி சற்று கட்டுப்படுத்தப்பட்டது. இன்றைய வர்த்தக நாளில் டாலர் குறியீட்டு எண் 0.17 சதவீதம் குறைந்து, 112.79 ஆக இருந்தது.

இந்திய ரூபாயின் வீழ்ச்சி இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 95.71 புள்ளிகள் உயர்ந்து, 59202.9 ஆக இருந்தது. இது 0.16% உயர்வாகும். அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.70 புள்ளிகள் உயர்ந்து, 17563.95 ஆக இருந்தது. இது 0.30% உயர்வாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu