டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.53 ஆக இருந்தது. இது முந்தைய நாளில் விட 9 பைசா குறைவாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு போன்றவை காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழல், உலக அளவில் வர்த்தகத்தை பாதித்து வருகிறது. இந்த நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து டாலர்களை வாங்கி வருகின்றனர். இதனால், இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை சீர் செய்வதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.