வரலாற்றுச் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு

August 29, 2022

இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு, வரலாற்றுச் சரிவை எட்டி உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு 80.11 ஆகும். கடந்த வெள்ளிக்கிழமையின் வர்த்தக நாளின் முடிவில், 79.87 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை 10.43 மணி அளவில், 80.02 ஆக உயர்ந்தது. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில் , இந்திய ரூபாயின் மதிப்பு 80 க்கும் கீழ் குறைந்தது. தற்போது, மீண்டும் அந்த நிலையை ரூபாய் […]

இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு, வரலாற்றுச் சரிவை எட்டி உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு 80.11 ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமையின் வர்த்தக நாளின் முடிவில், 79.87 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை 10.43 மணி அளவில், 80.02 ஆக உயர்ந்தது. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில் , இந்திய ரூபாயின் மதிப்பு 80 க்கும் கீழ் குறைந்தது. தற்போது, மீண்டும் அந்த நிலையை ரூபாய் எட்டி உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் டாலர் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் தலைவர் ஜெரோம் பவலின் இன்றைய உரைக்குப் பின்னர், டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. இன்று, ஜாக்சன் ஹோல், ஓமிங்கில் வைத்து நடைபெற்ற மத்திய வங்கிகளுக்கான மாநாட்டில் உரையாற்றிய அவர், "பணவீக்கம் 2% கீழாக குறையும் வரையில் மத்திய வங்கி தொடர்ந்து வட்டி பணவீக்க கொள்கைகளை இறுக்கும்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே, ஜூலை மாத இறுதியில் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அமெரிக்க ஃபெடரல் அமைப்பு அறிவித்திருந்தது. தற்போது, அமெரிக்காவின் பணவிக்கத்தை இரண்டு சதவீத இலக்கிற்கும் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையாக, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இதனால், இன்றைய நாளில் 1.5% சரிவை சந்தித்து வருகிறன்றன. அத்துடன், தங்க வர்த்தகமும் சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu