லைசென்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கிராமப்புறங்களில் தொழில் செய்யும் அனைவரும், டீக்கடை முதல் சிறு தொழில் வரை லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவித்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, பல வருடங்களாக இருந்த சட்டப்பிரிவில் ஒழுங்குமுறை இல்லாததால் பல ஊராட்சிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்ற பின், சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அத்துடன் தற்போதைய கட்டாய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.