இன்று, ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. சுமார் 60 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைன் பகுதிகள் எங்கும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் கீவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது. மேலும், பல அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் நிலவி வரும் உக்ரைன் பகுதியில், ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது என உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில், 1000க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு, பல உலக நாடுகளும், மனித உரிமை ஆணையங்களும், ஐநா சபையும் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், புதிதாக 2 லட்சம் வீரர்கள் ரஷ்ய படையில் இணைக்கப்பட்டுள்ளது உக்ரைன் போரை தீவிரப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.