பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பின்லாந்து தூதரகத்தை ரஷியா மூடியுள்ளது.
கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்ப்பதாக கூறி ஒன்பது ரஷிய தூதர்களை ஃபின்லாந்து அரசு வெளியேற்றியது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஏற்கனவே ஒரு தூதரகம் மூடிய நிலையில், தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஃபின்லாந்து தூதரகத்தையும் மூட ரஷியா முடிவு செய்துள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.














