விலை வரம்புகளை நிர்ணயிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பதை நிறுத்த ரஷ்யா முடிவு.

September 3, 2022

ரஷ்யாவின் எரிசக்தி வளங்களின் மீது விலை வரம்புகளை விதிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்வதை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஏழு நிதி அமைச்சர்கள் அடங்கிய G7குழுவானது மாஸ்கோவிற்கு வரும் வருவாயைக் குறைக்கும் நோக்கத்துடன் ரஷ்ய எண்ணெய் மீதான கொள்முதல் விலை வரம்பை நிர்ணயிப்பதற்கான திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தை அல்லாத கொள்கைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்காது என்று பெஸ்கோவ் கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யப் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எண்ணெய் […]

ரஷ்யாவின் எரிசக்தி வளங்களின் மீது விலை வரம்புகளை விதிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்வதை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஏழு நிதி அமைச்சர்கள் அடங்கிய G7குழுவானது மாஸ்கோவிற்கு வரும் வருவாயைக் குறைக்கும் நோக்கத்துடன் ரஷ்ய எண்ணெய் மீதான கொள்முதல் விலை வரம்பை நிர்ணயிப்பதற்கான திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தை அல்லாத கொள்கைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்காது என்று பெஸ்கோவ் கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யப் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் மீது தடை விதித்தது. அத்தடை முழுமையாக நடைமுறைக்கு வரும்போது ரஷ்யாவின் ஏற்றுமதியில் 90% நிறுத்தப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியின் அதிகபட்ச விலை அதன் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றி ஆய்வு செய்து வருவதாக பெஸ்கோவ் ௯றினார். மேலும் இந்த நடவடிக்கை எண்ணெய் சந்தைகளின் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று ௯றப்படுகிறது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu