உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி அதன் 5 கண்காணிப்பு நிலைகளை ரஷியா அழித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போரை தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போரை நிறுத்தும்படி பல நாடுகள் வலியுறுத்தின. இருப்பினும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியா ஏவுகணைகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு குழுவினர் குப்யான்ஸ்க் பகுதியில் உள்ள 5 போர் கண்காணிப்பு நிலைகளை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்புட்னிக் தெரிவித்தார்.