ரஷ்ய நாட்டில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களை, பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் என, ஐநா சபைக்கு ரஷ்யா 3 மாத கெடு விதித்துள்ளது.
இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா சகரோவா, தானிய ஒப்பந்தத்தில் இருந்து ஒரு நாடு விலக விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் படி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தானிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல, ரஷ்ய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி வழங்க, ஐநாவுக்கு 3 மாதங்கள் கெடு விதிப்பதாக கூறியுள்ளார்.














