ரஷியாவில் 2025-ம் ஆண்டில் 1% சுற்றுலா வரி விதிப்பு துவங்கும்.
ரஷியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் 1% வரி விதிக்கப்படும். 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரஷிய வரி குறியீட்டில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பல சுற்றுலா பகுதிகளில் இது முன்பே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 2025-ம் ஆண்டில் 1% சுற்றுலா வரி விதிப்பு துவங்கும். மேலும் 2027-ல் அது 3% ஆக உயரும். இந்த வரி, ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் வழங்குபவர்களால் செலுத்தப்படுகிறது. ஆனால் அது பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே பயணிகள் தங்குவதற்கான விலையுடன் சேர்க்கப்பட்டு கட்டணமாகும்.














