சிரியா சந்தையில் ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.