ரஷ்யாவின்- லூனா 25 என்ற விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியா சந்திராயன் -3 என விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா நிலவின் தென் துருவத்தை ஆராய லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது 5 நாட்கள் பயணம் செய்து நிலவில் சுற்றுவட்டப்பாதை அடைந்து பின்னர் 7 நாட்கள் நிலவின் சுற்றுப்பாதையில் பயணம் செய்து தரையிறங்கும் என்று கூறியுள்ளனர்.
அதேபோல் இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்ணில் தரையிறங்குகிறது. இதற்காக 3 இடங்களை ரஷ்யா தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய விண்கலம் தரையிறங்குவதற்கு முன் ரஷ்யா தனது விண்கலத்தை தரையிறக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யா 47 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது மீண்டும் இந்த விண்கலத்தை அனுப்பவுள்ளது.














