இந்திய தேர்தல்களில் தலையிட அமெரிக்கா முயற்சி - ரஷ்யா

May 9, 2024

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் இருந்தது. இந்த கருத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யூஎஸ்சிஐஆர்எப் அமைப்பு […]

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் இருந்தது. இந்த கருத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யூஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தேவையில்லாமல் தலையிடுவதாக இந்தியா குற்றச்சாட்டு வைத்திருந்தது.

இந்நிலையில், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் மூலம் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜக்காரோவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை சிக்கலாக்கவே அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu