மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் - கட்டிடங்கள் சேதம்

May 30, 2023

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இன்று காலை, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ட்ரோன் தாக்குதல் நடந்தது. மாஸ்கோவின் மேயர் செர்கேய் சோபயணின், இந்த ட்ரோன் தாக்குதலில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்ததாக அறிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ட்ரோன் தாக்குதல் நடந்த பகுதியில், ரஷ்யாவின் அவசர சேவைகள் பிரிவினர் பணி செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பவாசிகள் […]

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இன்று காலை, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ட்ரோன் தாக்குதல் நடந்தது. மாஸ்கோவின் மேயர் செர்கேய் சோபயணின், இந்த ட்ரோன் தாக்குதலில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்ததாக அறிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ட்ரோன் தாக்குதல் நடந்த பகுதியில், ரஷ்யாவின் அவசர சேவைகள் பிரிவினர் பணி செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பவாசிகள் வெளியேற்றப்பட்டனர். சிறப்பு பிரிவினரின் பணிகள் நிறைவடைந்த பின்னர், மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. நேற்று, ரஷ்ய கிராமம் ஒன்றில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து மாஸ்கோவில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu