ரஷ்யாவின் விண்வெளி மையமான ரோஸ்காஸ்மோஸ் தலைவராக யூரி பொரிசோவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக போக்குவரத்து துணை அமைச்சர் திமித்ரி பகனோவ் நியமிக்கப்பட்டுள்ளார். பொரிசோவ், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக பதவி வகித்த நிலையில், அவரது காலகட்டத்தில் 2023 ஆகஸ்டில் லூனா-25 விபத்துக்குள்ளானது. இது 47 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவு பயணமாக இருந்தது. அதே நேரத்தில், 2027ல் முதல் மாட்யூல்கள் செலுத்தப்பட உள்ள புதிய ரஷ்ய விண்வெளி நிலையத்திற்கான திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா-ரஷ்யா இடையேயான நிலவும் பதற்றம், 2026ல் முடிவடைய உள்ள ஆயுத ஒப்பந்தம் ஆகியவற்றால், விண்வெளி போட்டி மற்றும் அதின் இராணுவமயமாக்கல் குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் ரோஸ்காஸ்மோஸ் புதிய தலைவர் பகனோவ், முன்னதாக கோனெட்ச் என்ற செயற்கைக்கோள் நிறுவனத்தை வழிநடத்தியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.