உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக மூன்று டன் எடையுள்ள வெடிகுண்டுகளை பெருமளவில் தயாரிக்க ரஷ்யா தொடங்கியுள்ளது என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
FAB-3000 வான்குண்டுகளின் தயாரிப்பு பிப்ரவரியில் தொடங்கியதாக அமைச்சகம் வியாழன் அன்று தெரிவித்தது. FAB-500 மற்றும் FAB-1500 ஆகிய பல குண்டுகளின் உற்பத்தியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுக்கு தெரிவிக்கப்பட்டது. FAB-3000 வான்குண்டு 3000 கிலோ எடை கொண்டது. இது பலப்படுத்தப்பட்ட இராணுவ மற்றும் தொழில்துறை கட்டமைப்புகள் மற்றும் தங்குமிடங்களை அழிக்க பயன்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய இராணுவ பதிவர்கள் FAB-1500 க்ளைடு குண்டுகள் டான்பாஸில் அருகே உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் பல மாடி கட்டிடங்களை அழிக்கும் வீடியோக்களை வெளியிட்டனர்.