இந்தியாவுக்கான குத்தகைக்கு ஒத்துழைப்பது மற்றும் பெரிய அளவிலான திறன் கொண்ட கப்பல்களை கட்டமைப்பதற்கு தனது ஆதரவை வழங்க ரஷியா முன்வந்து உள்ளது.
ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்து, ரஷியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்படும் எண்ணெய்க்கு பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் தரப்படும் என கடந்த 5-ந்தேதி விலை உச்சவரம்பு நிர்ணயித்து அதற்கான முடிவை வெளியிட்டது. இந்த விலைக்கு கூடுதலாக எண்ணெய் விற்கப்பட்டால், ரஷிய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் பிற சேவைகள் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த விலை உச்சவரம்பு ரஷியாவின் விற்பனை விலையுடன் ஒத்து போகின்ற அளவிலேயே உள்ளன. அதனால், அவர்களின் அறிவிப்பால் ரஷியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று புடின் கூறினார். இந்நிலையில், ரஷியாவுக்கான இந்திய தூதர் பவன் கபூர் மற்றும் ரஷிய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதனையடுத்து, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் விதித்த விலை உச்சவரம்புக்கு ஆதரவு இல்லை என்ற இந்தியாவின் முடிவை ரஷிய துணை பிரதமர் வரவேற்றுள்ளார் என தெரிவித்தது. இதன்படி, இந்தியாவுக்கான குத்தகைக்கு ஒத்துழைப்பது மற்றும் பெரிய அளவிலான திறன் கொண்ட கப்பல்களை கட்டமைப்பதற்கு தனது ஆதரவை வழங்க ரஷியா முன்வந்து உள்ளது.