ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷியா

June 10, 2023

ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலையை ரஷியா அமைக்க உள்ளது. உக்ரைன் ரஷியா இடையே டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் […]

ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலையை ரஷியா அமைக்க உள்ளது.

உக்ரைன் ரஷியா இடையே டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu