கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்திக்கு அதிநவீன எரிபொருளை முன்வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வ பதிலளித்துள்ளார். அதில், தமிழகத்தின் கூடங்குளம் அணு மின் நிலைய உலைகளான 'யூனிட் 1' மற்றும் 'யூனிட் 2'ல் தற்போது 'யுடிவிஎஸ்' வகை எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எரிபொருள் வாயிலாக 12 மாதங்களுக்கு உலைகளை இயக்க முடியும்.
இந்நிலையில், இதற்குப் பதிலாக அதிநவீன 'டிவிஎஸ்2எம்' வகை எரிபொருளை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதன் வாயிலாக 18 மாதங்களுக்கு உலைகளை இயக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.














