உக்ரைனும், ரஷ்யாவும் நூற்றுக்கணக்கான போர் கைதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டனர்.
சமீபத்தில் சுமார் 65 உக்ரையின் போர் கைதிகளுடன் பறந்து கொண்டிருந்த ரஷ்ய இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனையடுத்து இந்த நல்லெண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யாவிடம் இருந்து 195 உக்ரைன் போர் கைதிகள் அவர்கள் தாய் நாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போர் கைதிகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் கூறுகையில், 207 உக்ரையின் ராணுவ வீரர்கள் திரும்பி வந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட அனைத்து வீரர்களையும் மீட்போம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் இத்தனை கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.