ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான செர்கய் கோடொவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே உக்ரைன் படை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்து உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பல அழிவுகளை சந்தித்தது. எனினும், பதிலடி தாக்குதல் மூலம் தற்போது ரஷ்யா அழிவுகளை சந்தித்து வருகிறது. இதுவரை இரண்டு ரஷ்ய போர்க்கப்பலை ட்ரோன் மூலம் உக்ரைன் மூழ்கடித்து உள்ளது. இந்நிலையில், நேற்று கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான செர்கய் கோடொவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே உக்ரைன் படை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்து உள்ளது. இதனை உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது. மூழ்கிய கப்பல் 1300 டன் எடை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பே இந்த கப்பலை தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைன் பின்னடைவை சந்தித்த போதிலும் கடந்த சில காலமாக ரஷ்ய போர்க்கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்கி வருகிறது. இந்த தாக்குதல் மிகவும் அரிதானது என்று கருதப்படுகிறது. ரஷ்யாவின் 33 சதவீத கப்பல்களை செயலிழக்க வைத்து விட்டோம் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்தது. அதோடு 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோக்ஸ்கவா என்ற ஏவுகணை தாங்கி கப்பலை ரஷ்யா இழந்தது குறிப்பிடத்தக்கது.