ரஷியா முதன்முதலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரஷியாவின் அஸ்திராகான் பகுதியில் இருந்து உக்ரைனின் டிரிப்ரோ நகரை இலக்காக வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. பாதிப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளிவரவில்லை. ரஷியா இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகள் 5,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு தாக்குதல்களை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவை. அணு ஆயுதங்களை சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. அதேபோல், ரஷியா அணு ஆயுதமில்லாமல் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.