டிரம்பை விட பைடன் அதிபராவதையே ரஷ்யா விரும்புகிறது என புதின் கூறினார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பிடென் ஆகிய இருவரும் எதிர்த்துப் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது அமெரிக்க தேர்தல் குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது, டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராவதை விட ஜோ பைடன் அதிபராவதை ரஷ்யா விரும்புகிறது. நீண்ட கால அனுபவம் உடையவர். அவருடைய நடவடிக்கைகளை எளிதில் யூகிக்க முடிகிறது. அவர் அந்த காலத்து அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சிந்தனைகள் கொண்டவராக உள்ளார். ஆனால் ட்ரம்ப் அப்படி கிடையாது. அவருடைய நடவடிக்கைகளை யூகிக்க இயலாது. அவரை புரிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் இணைந்து ரஷ்யா பணியாற்றும். இவ்வாறு புதின் கூறினார்.