அரிசியில் நுண்கிருமி - பாகிஸ்தானுக்கு ரஷ்யா கண்டனம்

April 23, 2024

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது. பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்கிறது. கடந்த நிதியாண்டில் மற்றும் 40 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் ​நுண் கிருமி இருப்பதை ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்துள்ளது. மெகா சீலியா ஸ்கேலாரிஸ் எனப்படும் அந்த ​நுண் கிருமி ரஷ்யாவின் […]

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது.

பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்கிறது. கடந்த நிதியாண்டில் மற்றும் 40 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் ​நுண் கிருமி இருப்பதை ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்துள்ளது. மெகா சீலியா ஸ்கேலாரிஸ் எனப்படும் அந்த ​நுண் கிருமி ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு துறையால் தடை செய்யப்பட்டதாகும். எனவே இது குறித்து பாகிஸ்தான் தூதரை அழைத்து ரஷ்யா கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டிலும் இதே போல் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போதும் சுகாதார பாதுகாப்பு காரணங்களே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu