கிரீமியா பாலத்தின் மீது உக்கரைனின் அதிரடி தாக்குதல்- ரஷ்யா குற்றச்சாட்டு!!!

July 18, 2023

உக்ரைன் - ரஷ்யாவை இணைக்கும் கெர்ச் பாலம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் ஓராண்டு கடந்த நிலையில் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு நாடுகளையும் இணைக்கும் கெர்ச் பாலம் 2 கடல்சார் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் அங்கு 19 கிலோமீட்டர் இடைவெளியில் ரயில் போக்குவரத்து சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த பாலம் […]

உக்ரைன் - ரஷ்யாவை இணைக்கும் கெர்ச் பாலம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் ஓராண்டு கடந்த நிலையில் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு நாடுகளையும் இணைக்கும் கெர்ச் பாலம் 2 கடல்சார் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் அங்கு 19 கிலோமீட்டர் இடைவெளியில் ரயில் போக்குவரத்து சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது .

இந்த பாலம் வழியாகத்தான் ரஷ்ய பணிகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அனுப்பப்படுகின்றன. அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதால் உடனடியாக பாலம் மூடப்பட்டது. மேலும் இந்த பாலத்தின் மீது இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் டிரக் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யா, உக்ரைன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu