கூகுள் நிறுவனத்திற்கு கூடுதலாக 47 மில்லியன் டாலர் அபராதம் - ரஷ்ய நீதிமன்றம்

June 28, 2023

ரஷ்ய நீதிமன்றம் ஒன்று, கூகுள் நிறுவனத்திற்கு 4 பில்லியன் ரூபிள்கள் அபராதம் விதித்துள்ளது. இது 47 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறியதாலும், தனது அதிகாரப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, வீடியோக்களை பதிவிடும் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூகுள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்ய அரசின் ஊடகத்தை கூகுள் நிறுவனத்தின் யூடியூப் […]

ரஷ்ய நீதிமன்றம் ஒன்று, கூகுள் நிறுவனத்திற்கு 4 பில்லியன் ரூபிள்கள் அபராதம் விதித்துள்ளது. இது 47 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறியதாலும், தனது அதிகாரப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய உலகில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, வீடியோக்களை பதிவிடும் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூகுள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்ய அரசின் ஊடகத்தை கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் முடக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 2022 பிப்ரவரியில் 2 பில்லியன் ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்த தவறியதால், தற்போது, இரட்டிப்புத் தொகையாக 4 பில்லியன் ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu