இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், இந்தியாவின் இறக்குமதி அளவு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அளவில், 28% ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி மாதத்தில், சராசரி நாள் ஒன்றுக்கு 1.27 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணையை, இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது டிசம்பர் மாத அளவைவிட 6% கூடுதலாகும். மேலும், தொடர்ச்சியாக 4 மாதங்களாக, இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக ரஷ்யா திகழ்ந்து வருகிறது. அதே வேளையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி, ஜனவரி மாதம் 6% குறைந்து, 4.6 மில்லியன் பேரல்களாக பதிவாகியுள்ளது.














