உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷிய படைகள் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோ பெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.














