இத்தாலியில் ரஷ்ய ஹேக்கர்கள் கைவரிசை

August 3, 2023

இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சில குறிப்பிட்ட சாஃப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் சைபர் கிரைம் தாக்குதல்கள் அடிக்கடி அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் ரஷ்ய ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பி.இ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகளின் இணையதளங்கள் மற்றும் ஒரு தனியார் […]

இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சில குறிப்பிட்ட சாஃப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் சைபர் கிரைம் தாக்குதல்கள் அடிக்கடி அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் ரஷ்ய ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பி.இ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகளின் இணையதளங்கள் மற்றும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணைய சேவையும் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வங்கி பண பரிவர்த்தனைகள், பணத்தை டெபாசிட் செய்தல், திரும்ப பெறுதல் போன்ற முக்கிய வங்கி சேவைகள் அனைத்தும் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. இதனால் அங்குள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த நோ நேம் 057 ஹேக்கர்கள் குழு இது ஆரம்பம் தான் என எச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்திகளை பர விட்டுள்ளனர். இது குறித்து அந்நாட்டின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu