உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது.
ரஷ்யா ராணுவத்துக்கு சொந்தமான ஐலுசின் ஐ எல் 76 ரக ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோ ரோடு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. அந்த விமானத்தில் சுமார் 65 உக்ரைன் போர் கைதிகளும், 6 ரஷ்ய விமானிகளும் மூன்று இதர பயணிகளும் இருந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் இல்லை. இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ரஷ்ய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணியினர் பணிகளை மேற்கொள்கின்றனர். விசாரணை குழுவும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விமானம் கீவ் பகுதியில் இருந்து சுற்று வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய கீழவை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய வீரர்கள் தங்கள் சொந்த வீரர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது உறுதி செய்யப்பட்ட தகவல் என்று கூறியுள்ளார்.