உக்ரைனில் இரண்டு கிராமங்களைக் கைப்பற்றியது ரஷிய ராணுவம்

July 2, 2024

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வந்துள்ளது. உக்ரைன் போரில் உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் அல்ல என்று புதின் கூறி வருகிறார். இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வந்துள்ளது. தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெப்போவா மற்றும் டொனேட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபொக்ரோஸ்கே ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு […]

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

உக்ரைன் போரில் உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் அல்ல என்று புதின் கூறி வருகிறார். இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வந்துள்ளது. தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெப்போவா மற்றும் டொனேட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபொக்ரோஸ்கே ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. கடந்த மே மாதம் முதல் தலைநகரான கார்கிவ் மீது ரஷ்யா கடும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளால் ரஷ்யாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக புதின் பல்வேறு நாடுகளிடையே ஆதரவு திரட்டி வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu