15 பேருடன் சென்ற ரஷிய விமானம் நொறுங்கியது

March 13, 2024

ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் பறக்க தொடங்கிய உடனே விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பயணம் செய்தனர். அவர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் இல்லை. இல்லுஸின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டரில் தூரத்தில் உள்ள இவானோவோ என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், 7 பயணிகளும் இருந்தனர் என்று ரஷ்ய […]

ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.

ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் பறக்க தொடங்கிய உடனே விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பயணம் செய்தனர். அவர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் இல்லை. இல்லுஸின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டரில் தூரத்தில் உள்ள இவானோவோ என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், 7 பயணிகளும் இருந்தனர் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விமானத்தின் இன்ஜின்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான இடத்திற்கு ராணுவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu