ரஷ்யாவில் மேலும் 2 ரஷ்ய ராணுவ அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
அதிபர் புதின் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் முதல் நடவடிக்கையாக பாதுகாப்பு துறை மந்திரியை மாற்றினார். அதற்கு பின்பு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த வாரம் ராணுவ தளபதி இவான் போபோவ் ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டதில் ரூ.8 கோடி சிக்கியது.
இந்நிலையில், மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ ஒப்பந்தங்களை லாபகரமாக ஏற்படுத்தும் பொருட்டு ஊழல் செய்யப்படுகிறது என்றும் இதனை ஒழிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.