ரஷ்யாவில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் பாதுகாப்புத் துறைக்கு வரலாறு காணாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற அவை தலைவர் கூறியதாவது ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ள பொருளாதார தடையின் தாக்கத்தை குறைக்கவும் ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் சிறப்பு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ராணுவத்துக்கான அதிகப்பட்ச நிதி ஒதுக்கீடாகும்.