ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்

May 20, 2023

ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷியா-உக்ரைன் போரில் தொடக்கத்தில் இருந்தே ரஷியாவுக்கு ஆதரவாக சீனா உள்ளது. ஆனால் போர் ஓர் ஆண்டை கடந்தும் நடந்து வருகிறது. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்ததையடுத்து, சீன அதிபர் ஷி ஜின்பெங் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் […]

ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ரஷியா-உக்ரைன் போரில் தொடக்கத்தில் இருந்தே ரஷியாவுக்கு ஆதரவாக சீனா உள்ளது. ஆனால் போர் ஓர் ஆண்டை கடந்தும் நடந்து வருகிறது. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்ததையடுத்து, சீன அதிபர் ஷி ஜின்பெங் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தற்போது ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வருகிற 23-ந் தேதி சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அப்போது வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu