ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தரும் திட்டம் உள்ளது. ரஷியாவின் கிரெம்லின் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், இந்திய பத்திரிகையாளர்களிடம் காணொலியில் பேசினார். "இந்தியா-ரஷியா உறவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் இந்த பயணத்திற்கான திட்டங்கள், முக்கிய விவாதங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக இறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என அவர் தெரிவித்தார். புதினின் பயணத் தேதிகள் இருதரப்பு ஆலோசனைகளுக்கு பிறகு, விரைவில் தீர்மானிக்கப்படும்.