அமெரிக்கா-இந்தியா வர்த்தக பதற்றத்தின் நடுவே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியாவுக்கு சென்றபோது வழங்கிய அழைப்பை அவர் ஏற்றுள்ளார். புதின் வருகைக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த சந்திப்பு, வர்த்தகம், பாதுகாப்பு, மற்றும் சர்வதேச கொள்கை தொடர்பான முக்கிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு விதித்த வரிவிதிப்பின் பின்னணியில், இந்த பயணம் அதிக அரசியல் மற்றும் தூதரக முக்கியத்துவம் பெறுகிறது.