ரஷ்யாவின் செயற்கைக்கோள் ஒன்று கடந்த ஜூன் 26 ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு பகுதிகளாக உடைந்துள்ளது. பூமியிலிருந்து குறைந்த உயரத்தில் உள்ள சுற்றுவட்ட பாதையில் மிகப்பெரிய அளவிலான விண்வெளி குப்பையை இது ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் Resurs P1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் கடந்த 2013 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதன் செயல்பாடுகள் நிறைவடைந்து, இதன் சுற்றுவட்ட பாதை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், பூமியிலிருந்து 355 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் பயணித்தது. நிகழாண்டு இறுதிக்குள் பூமிக்குள் விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிஷ்டவசமாக நொறுங்கி உள்ளது. ரஷ்ய செயற்கைக்கோள் ஏற்படுத்தி உள்ள விண்வெளி குப்பை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவரவர் பயணித்த விண்கலத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.