ரஷ்ய சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வடகொரியா அனுமதி அளித்துள்ளது.
ரஷ்ய சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வடகொரியா அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ரஷ்ய பயணிகளின் முதல் குழுவினர் வடகொரியாவுக்கு நேற்று வந்தனர். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதை வடகொரியா கடுமையாக தடுத்தது. தற்போது ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் பல நாடுகள் ரஷ்யாவை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவுடன் வடகொரியா நட்பு பாராட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியா அனுமதி அளித்துள்ளது.