ரஷியாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும் -  உக்ரைன் அதிபர் 

April 13, 2023

ரஷியாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும் என்று உலக வங்கிக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது, சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் […]

ரஷியாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும் என்று உலக வங்கிக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது, சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu