ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வடகொரியா பயணிக்க உள்ளார். வரும் புதன்கிழமை அவர் வடகொரியா செல்ல உள்ளதாக வடகொரிய தேசிய ஊடகம் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை உறுதி செய்துள்ளன.
கடந்த மாதம், வடகொரியா அதிபர் கிம் ஜான் உன், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் பயண நிகழ்வு உள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கிம் ஜான் உன் பயணத்தின் போது விவாதிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான செயல்படுத்தலை லாவ்ரோவின் பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் செயற்கைக்கோள் திட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகள் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.