பிரதமர் மோடி அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரச முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர் 22வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு அந்நாட்டு அதிபர் புதினுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் ரஷ்ய அரசு சார்பாக பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் "ஆர்டர் ஆஃப் செயின்ட் அப்போஸ்ஸல்" விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது இந்தியா - ரஷ்யா இடையே நட்புறவை ஊக்குவிக்கும் முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது