நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்த ரஷ்யாவின் லூனா 25

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி மையம் லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. இது, இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு போட்டியாக கூறப்படுகிறது. தற்போது, லூனா 25 விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லூனா 25 விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, நிலவில் உள்ள கனிம வளங்கள் மற்றும் நீர் வளம் குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதே நோக்கில், இந்தியா, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியுள்ளது […]

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி மையம் லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. இது, இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு போட்டியாக கூறப்படுகிறது. தற்போது, லூனா 25 விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லூனா 25 விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, நிலவில் உள்ள கனிம வளங்கள் மற்றும் நீர் வளம் குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதே நோக்கில், இந்தியா, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. லூனா 25, சந்திரயான் 3 தரையிறக்கத்திற்கு 2 நாட்கள் முன்னதாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ள லூனா 25, 5 நாட்களுக்கு இதில் பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஆகஸ்ட் 21ஆம் தேதி தரை இறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது, 47 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் ரஷ்யாவின் நிலவு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu