உக்ரைனில் ரஷியாவின் பெரும் தாக்குதல் – 300 டிரோன்கள், 30 ஏவுகணைகள்; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

July 19, 2025

ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவரும், ஒரு குழந்தை உட்பட ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்; உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை, உக்ரைன் மீது ரஷியா 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியது. கருங்கடலருகே உள்ள ஒடேசா நகரில் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்கியதில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். […]

ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவரும், ஒரு குழந்தை உட்பட ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்; உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை, உக்ரைன் மீது ரஷியா 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியது. கருங்கடலருகே உள்ள ஒடேசா நகரில் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்கியதில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த இடத்தில் தத்தளித்த ஐந்து பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என மேயர் ஹென்னாடி ட்ருக்கானோவ் உறுதிப்படுத்தினார். உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி, வடகிழக்கு சுமி பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்புகள் இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல், உக்ரைனின் பாதுகாப்புத் துறையில் பெரும் பதறலையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu