சாட் ஜிபிடி க்கு போட்டியாக ஜிகாசாட் - ரஷ்ய நிறுவனம் அறிமுகம்

April 25, 2023

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பெர் (Sber), ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு போட்டியாக, மற்றொரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஜிகாசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு சாட் பாட், ரஷ்யாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது ரஷ்ய மொழியில் உரையாடல் நிகழ்த்தி, தகவல்களை வெளியிடும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில், பரிசோதனை அடிப்படையில் இது பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பெர் (Sber), ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு போட்டியாக, மற்றொரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஜிகாசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு சாட் பாட், ரஷ்யாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது ரஷ்ய மொழியில் உரையாடல் நிகழ்த்தி, தகவல்களை வெளியிடும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில், பரிசோதனை அடிப்படையில் இது பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஜிகா சாட் மூலம், உரையாடல் மேற்கொள்ள முடியும். செய்திகளை எழுத மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். மேலும், கோடிங் எழுதுதல் மற்றும் தகவல்களை வைத்து புகைப்படங்களை உருவாக்குதல் ஆகியவற்றையும் மேற்கொள்ள முடியும்” - இவ்வாறு ஸ்பெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரஷ்யாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையின் முக்கிய திட்டம் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu