ரஷ்யாவின் தனியார் ராணுவப் படையான வாக்னர் குழு, நவீன ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்புக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
லெபனானைச் சேர்ந்த ராணுவ இயக்கம் ஹிஸ்புல்லா ஆகும். தற்போது இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரமாக போரிட உள்ளது. ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு, தற்போது வாக்னர் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. உக்ரைன் படைகளை வீழ்த்துவதற்காக வாக்னர் குழு பயன்படுத்திய SA 22 ஏவுகணை அமைப்புகள் தற்போது ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு வழங்கப்படுவதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால், ஏவுகணை பரிமாற்றம் தொடர்பான உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.